You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: திடீரென ஆக்ரோஷமாக காரை தாக்கிய யானை
குட்டியுடன் யானைக் கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தபோது திடீரென ஆக்ரோஷமடைந்த யானை ஒன்று சுற்றுலாப் பயணிகளின் காரை தாக்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி சாலை, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்கிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இங்கு சாலையை கடந்து செல்வது இந்நிலையில், தொரப்பள்ளி சாலையில் யானைக் கூட்டம் ஒன்று சாலையை கடந்து சென்றது.
இதனால் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தில் இருந்த ஒரு யானை திடீரென ஆக்ரோஷமடைந்து அங்கிருந்த ஒரு காரை தாக்கியது. உடனடியாக ஓட்டுநரை காரை பின்னோக்கி இயக்கினார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு மற்ற யானைகளுடன் அந்த யானையும் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த சம்பவத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதன் உள்ளே இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், யானைக் கூட்டங்கள் சாலையை கடக்கும்போது, வாகனங்களை வெகு தொலைவிலேயே நிறுத்த வேண்டும் என்றும், யானைகளுக்கு அருகில் சென்று ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு