நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
சென்னையில் பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்
சென்னை பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றம் அருகே என்.எஸ்.சி.போஸ் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளனது. இது ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி சென்ற பேருந்து என கண்டறியப்பட்டது.
பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி, சாலையில் இருந்த டிவைடர் மீது ஏறி நின்றதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றப்பட்டது.
பேருந்து ஓட்டுநர் ராமமூர்த்தி, நடத்துநர் தேவராஜ் ஆகியோரிடம் விபத்து குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு