''15-இல் இருந்து 1 ஏக்கரில் வந்து நிற்கிறோம்'' - என்.எல்.சி விரிவாக்கத்தால் பாதிப்பு என மக்கள் கூறுவது ஏன்?
''15-இல் இருந்து 1 ஏக்கரில் வந்து நிற்கிறோம்'' - என்.எல்.சி விரிவாக்கத்தால் பாதிப்பு என மக்கள் கூறுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் வானாதி ராயபுரம், தென்குத்து ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ என்ற பகுதியை ஒட்டியுள்ள இக்கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் பிரதான தொழில்களாக உள்ளன.
இந்த இரண்டு கிராமங்களில் இருந்து 3.40 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்த உள்ளதாக, தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்குள்ள கள நிலவரம் என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



