காணொளி: வால்பாறையில் மண்சரிவு - சாலையில் விழுந்த பாறைகள்

காணொளிக் குறிப்பு, வால்பாறை
காணொளி: வால்பாறையில் மண்சரிவு - சாலையில் விழுந்த பாறைகள்
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அக்டோபர் 25ம் தேதி இரவு மண் சரிவு ஏற்பட்டது. 15-ஆவது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பெரிய பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

அந்த சமயத்தில் அப்பகுதியில் போக்குவரத்து இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை மற்றும் வனத் துறையினர் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றினர். இதையடுத்து, தற்போது அப்பகுதியில் போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு