காணொளி: ஏமனில் பசியில் வாடும் இரட்டைக் குழந்தைகள்

காணொளி: ஏமனில் பசியில் வாடும் இரட்டைக் குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது

ஹுத்தி படைகளிடம் இருந்து தப்பி வந்த பஜாஷ் ஹசன், பிறந்து சில நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் உள்படத் தனது ஐந்து குழந்தைகளுடன் உதவி கோரி இந்த மருத்துவமனைக்கு வந்தார். மிகவும் முன்கூட்டியே பிறந்த அந்த இரட்டைக் குழந்தைகள் இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமை வந்தடைந்தாலும், அவர்கள் இன்னும் உடல்நலம் குன்றிய நிலையிலேயே உள்ளனர்.

ரகாத், ராத் எனப் பெயரிடப்பட்ட அந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் பிறந்து ஏழு வாரங்கள்தான் ஆகின்றன. குண்டுவீச்சுகள், ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தப்பி குடும்பத்தினர் ஓடியபோது, போர்வைகளை மட்டுமே போர்த்தி அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்ததாக அவர்களின் தாய் கூறுகிறார். மேல் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு