காணொளி: உருகும் பனிப்பாறையிலிருந்து கிராமத்தை காக்க பிரார்த்தனை

காணொளிக் குறிப்பு, கிராமத்தைக் காக்கப் பிரார்த்தனை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

காலநிலை மாற்றம் இமயமலையின் நிலப்பரப்பை நாளுக்கு நாள் மேலும் ஆபத்தானதாக மாற்றி வருகிறது.

ஹல்ஜி கிராமமும், 1000 ஆண்டுகள் பழமையான அதன் மடாலயமும் கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள பனிப்பாறை ஏரியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

சமீப ஆண்டுகளில், வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளங்களிலிருந்து இந்தக் கிராமம் தப்பிப் பிழைத்துள்ளது.

தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கிராம மக்கள் வெள்ளத் தடுப்புச் சுவர்களைக் கட்டியுள்ளனர். அவர்களில் பலர் இந்தக் கிராமத்திலேயே தொடர்ந்து வாழ விரும்புகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரமும் இருப்பும் நூலிழையில் இருப்பதை அறிந்திருந்தும் உயிர் பிழைத்திருக்க கிராம மக்கள் பிரார்த்தனைகளையே நம்பியுள்ளனர். பள்ளத்தாக்கைப் பாதுகாக்க இந்த துறவிகள் தினமும் பிரார்த்தனை செய்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு