ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிப்பின் தீவிரத்தைக் காட்டும் 10 படங்கள்

ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, அதிவேக ரயில் ஒன்று மற்றொரு ரயிலுடன் மோதியதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

கணினி கோளாறு காரணமாக ரயில்கள் முதலில் நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மையம் எடுத்த "விளக்க முடியாத" முடிவே மோதலுக்குக் காரணமாக அமைந்ததாக ஸ்பெயின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களது ரயில் பின்னால் இருந்து ரென்ஃபே ரயிலால் மோதப்பட்டதாக இர்யோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு ரயில்களிலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் நிலவிய காட்சிகள் "மிகவும் கொடூரமானவை" என்று நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை.

ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
படக்குறிப்பு, கணினி கோளாறு காரணமாக, மோதிக்கொண்ட இரண்டு ரயில்கள் உட்பட, இயங்கிக்கொண்டிருந்த ஆறு ரயில்கள் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புயன்டே கூறுகிறார்
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
படக்குறிப்பு, தங்களது ரயில் பின்னால் இருந்து ரென்ஃபே ரயிலால் மோதப்பட்டதாக இர்யோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு ரயில்களிலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
படக்குறிப்பு, "முழு ஸ்பெயினும் துயரத்தில் மூழ்கியுள்ளது " என்று கூறிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நாடு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என அறிவித்துள்ளார்.
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
படக்குறிப்பு, "போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சர்கள் இந்தத் துயரச் சம்பவத்திற்கும், இந்தக் கோரமான விபத்திற்கும் மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய முயன்று வருகின்றனர்... நாங்கள் இதன் ஆணிவேரைக் கண்டறிவோம், ஏதேனும் அலட்சியம் இருந்திருந்தால், அதை வெளிக்கொணர்வோம்" என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
படக்குறிப்பு, பயணம் தொடங்கி சுமார் 40 நிமிடங்களான நிலையில் பலத்த அதிர்வுடன் விபத்து நிகழ்ந்ததாக ரயிலில் இருந்த பயணி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்
படக்குறிப்பு, சுமார் 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஸ்பெயின், ரயில் விபத்து, புகைப்படங்கள்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு