காணொளி: நேபாளத்தில் குவிந்திருக்கும் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் - அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரிடரால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு உறுதி செய்துள்ள நிலையில், சித்வான் வழியாக ஓடும் ஆற்றில் மட்டும் திங்களன்று நிலவரப்படி சுமார் 300 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இங்கு உடல்களைப் பாதுகாக்கப் போதுமான குளிர்சாதன வசதிகள் இல்லாததால், அரசு அலுவலகத்தில் உடல்கள் வைக்கப்பட்டு துர்நாற்றத்தைத் தடுக்க பினாயில் தெளிக்கப்படுகிறது. உறவினர்கள் திரையில் காட்சிகளைப் பார்த்து உடல்களை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.
இதுவரை 10 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடல்களைப் புதைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் உறவினர்கள் உரிமை கோரும் வகையில் ஒவ்வொரு உடலின் டிஎன்ஏ மாதிரியும் பாதுகாக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



