நேபாள வெள்ளம்: தொழில், சேமிப்புகளை இழந்து தவிக்கும் பிகார் மக்கள்
நேபாள வெள்ளம்: தொழில், சேமிப்புகளை இழந்து தவிக்கும் பிகார் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
நேபாள பெருவெள்ளத்தில் தங்கள் தொழில்களை, வசிப்பிடங்களை, சேமிப்புகளை இழந்து நிற்கும் இவர்கள் நேபாள மக்கள் அல்ல.
இந்தியாவின் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நேபாளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் கடைகளை நடத்தி வந்தவர்கள், அங்கு வேலை பார்த்தவர்கள்.
கடந்த புதன்கிழமை அன்று, திரிசூலி நதியில் பாய்ந்த பெருவெள்ளம் திரிசூலி பஜார் பகுதியை முழுவதுமாக அழித்துச் சென்றது. தொழில்களை இழந்தது மட்டுமல்லாது, தங்களது உறவினர்களையும் காணவில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



