நேபாளத்தில் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி
நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி
நேபாளத்தில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்ட 2 நாட்களுக்கு பிறகு 5 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட 5 வயது சிறுமி மனிஷா, மருத்துவமனையில் தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்தார். மனிஷா தற்போது நிலையான உடல் நலத்துடன் உள்ளார் என்று காத்மாண்டுவிலுள்ள டீச்சிங் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ரசுவா மாவட்டத்தின் சியாப்ருபேசி பகுதியில் மீட்புப் பணியாளர்கள் உயிர் தப்பியவர்களைத் தேடி வந்தபோது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு பூனையின் சத்தம் கேட்பதாக நினைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு கண்டுபிடித்தது சிறுமி மனிஷாவை.
அதன்பிறகு, சிறுமி மனிஷா ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிலுள்ள டீச்சிங் மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தகவலில், மனிஷா உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



