காணொளி: 2029 பிரதமர் வேட்பாளர் யார்? தவெக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கருத்து மோதல்

காணொளிக் குறிப்பு, 2029 பிரதமர் வேட்பாளர் யார்? தவெக - காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இடையே கருத்து மோதல்
காணொளி: 2029 பிரதமர் வேட்பாளர் யார்? தவெக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கருத்து மோதல்
பிரசுரிக்கப்பட்டது

வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி பேசுகையில், "2029-ல் பிரதமர் வேட்பாளராக நமது தலைவர் தளபதிதான் (முதலமைச்சர் விஜய்) இருப்பார். டெல்லி அல்ல, தமிழ்நாடே நாட்டின் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே தளபதியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் அமர வைப்பார்" என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், "2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தவெக எம்.எல்.ஏ-க்கள் புதிதாகப் பதவிக்கு வந்துள்ளதால், இன்னும் ரசிகர் மனப்பான்மையுடன் பேசுகிறார்கள். தங்கள் தலைவரை உயர்த்திப் பேசுவது தவறில்லை என்றாலும், வருங்காலப் பிரதமர் ராகுல் காந்திதான் என்பதில் எங்களது கட்சித் தலைமையும் தெளிவுபடுத்தியுள்ளது" எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு