தசரா கொண்டாட்டத்தில் திடீரென மிரண்டு ஓடிய யானை

காணொளிக் குறிப்பு, தசரா கொண்டாட்டம்; திடீரென மிரண்டு ஓடிய யானை
தசரா கொண்டாட்டத்தில் திடீரென மிரண்டு ஓடிய யானை
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகாவில் தசரா கொண்டாட்டத்தின் போது ஒரு யானை திடீரென மிரண்டு ஓடியது. ஷிமோகாவில் இந்த சம்பவம் நடந்தது.

கூட்டத்தை கண்டு பயந்த யானை, கட்டப்பட்டிருந்த இடத்திற்குத் திரும்ப முயன்றதாகவும், இந்த சம்பவத்தில் யாரையும் தாக்கவில்லை என்றும் சில வாகனங்களை மட்டும் சேதப்படுத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கமாக கடவுள் சிலையை சுமக்கும் யானைக்கு பதிலாக புதிய யானை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதே இதற்கு காரணமென உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு