நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: ஓட்டுநருக்கு 'தெரியாமல்' ஓடும் காரின் மேலே அமர்ந்து பயணித்த குரங்கு
காணொளி: ஓட்டுநருக்கு 'தெரியாமல்' ஓடும் காரின் மேலே அமர்ந்து பயணித்த குரங்கு
பிரசுரிக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சென்ற காரின் மேல் குரங்கு ஒன்று அமர்ந்து பயணித்த காட்சி இது.
சுங்கசாவடியில் நின்ற மற்ற வாகனங்கள் இந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்ப்பதை கண்ட இந்த காரின் ஓட்டுநர், காரை நிறுத்திவிட்டு பார்த்த போதுதான் குரங்கு காரின் மீது அமர்ந்திருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
சக வாகன ஓட்டிகள் பதிவு செய்த இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு