நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
33 ஆவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையும்'
வணக்கம் நேயர்களே!
புகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்.காம் இணைய தளத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறீர்களா?
33 ஆவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையும்'
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்க்கை உள்ளிட்டவற்றை அடக்கிய புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம்.
விதிமுறைகள் என்ன?
மின்னஞ்சல் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]
உங்கள் புகைப்படங்களை வரும் வாரம் வெள்ளிக்கிழமை நற்பகல் 12 மணிக்குள் அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு அனுப்பப்படும் படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.
புகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.
மற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.
மேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.
புகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்