You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பிரசவத்தின்போது தாய் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - என்ன நடந்தது?
கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கல்பனா தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லுமாறு தன் குடும்பத்தினரிடம் கெஞ்சுவதும், மருத்துவமனை ஊழியர்கள் தன்னைக் கொல்ல முயல்வதாகக் குற்றம் சாட்டுவதும் கேட்கிறது.
இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியில் நிகழ்ந்துள்ளது. அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, பிரசவத்திற்காக ஆகஸ்ட் 25 அன்று இரவு ரேவாவில் உள்ள அரசு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கல்பனா மிஸ்ரா அனுமதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 26 அன்று இரவு சுமார் 8:30 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன்பின் சிறிது நேரத்திலேயே கல்பனாவும், பிறந்த குழந்தையும் உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மீது அலட்சியம் காட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ள குடும்பத்தினர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு