BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
வங்கக்கடலில் புயல் உருவாகிறது - எங்கே, எப்போது கரையை கடக்கும்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (அக்டோபர் 24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதி காலை அது புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ரூ.20 தண்ணீர் பாட்டிலுக்காக கொலை': வேலை தேடிச் சென்ற 3 குழந்தைகளின் தந்தைக்கு என்ன நடந்தது?
ஆந்திராவில் 20 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலைத் திருட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர், நான்கு இளைஞர்களால் மின் கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகத் விஜயவாடா படமட்டா காவல் நிலைய ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
'மாட்டிறைச்சி சாப்பிடுவியா?': கோவையில் பிளஸ்-1 மாணவருக்கு பள்ளியில் என்ன நடந்தது? வழக்கின் பின்னணி
கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கனமழையில் மரங்கள் விழுவது ஏன்? சாலையோரம் எந்த மரங்களை வளர்க்கலாம்? 5 முக்கிய விஷயங்கள்
எந்தெந்த மரங்களை வளர்க்கலாம், அவை விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?
சாத்தான்குளம் அருகே 15 வயது சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில் சிறுமியின் தாய் உயிரிழந்தார். சிறுமியின் தந்தை மற்றும் 12 வயது தம்பி பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது?
செளதியில் வேலைக்கு செல்லும் வங்கதேச பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது?
செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி, வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே போட்டியில் 93 பவுண்டரி, 30 சிக்ஸர்: ஒருநாள் போட்டிக்கு சச்சின் யோசனையை நினைவுகூரும் நிபுணர்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 ரன்கள் எடுப்பது ரசிகர்களால் வெற்றிக்கான ஸ்கோராக கருதப்படுகிறது. அதேபோல, இரட்டை சதமடித்தவர் இடம்பெற்ற அணி வெற்றி பெறும் என்பதே வரலாறாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு விஷயங்களும் இங்கிலாந்துக்கு கைகொடுக்கவில்லை.
சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் 'குற்றங்கள்' பற்றித் தெரிந்திருந்தும் வங்கதேசம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்தைச் சேர்ந்த இரு குடிமக்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் குறித்து சௌதி அரேபிய அதிகாரிகள் வங்கதேசத் தூதரகத்துக்குத் தெரிவிக்கவில்லை.இதுதொடர்பாக வெளியான சமீபத்திய தகவல் என்ன?
மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவது ஒன்றே தீர்வா? மருத்துவர்கள் விளக்கம்
மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட அனைவருக்கும் மார்பகங்களை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில், சில வார இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை புதிய ராணுவக் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறதா? இது இந்தியாவின் நலன்களை எவ்வாறு பாதிக்கும்?
'அனைவரின் பெயரும் நினைவில் இருப்பதில்லை' – 58 குழந்தைகளின் தந்தையான முகமது சாதிக்கின் கதை
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 57 வயதான முகமது சாதிக், நான்கு மனைவிகள் மூலம் 58 குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ள நிலையில், வறுமை, உணவுப் பற்றாக்குறை மற்றும் கல்விச் செலவுகளுக்கு இடையே தனது குடும்பத்தைப் பராமரிக்கப் போராடுவதுடன், குழந்தைகள் கல்வி கற்று பசியின்றி வாழ வேண்டும் என விரும்புகிறார்.
செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய புதிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் 583 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வறிக்கை தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைச் சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடுகிறது. முந்தைய அறிக்கையிலிருந்து இது மாறுபடுவதாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்புவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
ஜந்தர் மந்தர் 2.0: காக்ரோச் ஜனதா கட்சி தவறியது எங்கே? நேஹா போராவின் பலமாக மாறியது எது? – ஓர் அலசல்
இந்தப் போராட்டம் சாமானிய மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதா? இதில் காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் என்ன பங்கு வகிக்கின்றன?
புகைப்படத்தில் உங்கள் முகம் பார்த்தே நோயின் தீவிரம், ஆயுளை கூறும் 'செயற்கை நுண்ணறிவு'
நோயாளி ஒருவரின் புகைப்படத்தைக் கொண்டு, அவருடைய நோய் பாதிப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள உள்ளாடையை இவர் அணிந்து வந்ததால் என்ன சர்ச்சை?
ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரக நிலவில் வெறும் 10 கிராம் துகள்களை எடுத்துவர ஜப்பான் திட்டம் - என்ன கிடைக்கும்?
செவ்வாய் கிரகத்தின் நிலவுத் துகளில் 10 கிராமை பூமிக்குக் கொண்டுவரும் ஒரு லட்சியத் திட்டத்திற்காக, விண்கலம் ஒன்று ஏவப்பட உள்ளது.
இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?
பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, பிராந்தியப் போட்டியாளர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் நேபாளத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நேபாள பிரதமர் பலேந்திர ஷாவின் லட்சியத் திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது.
தேங்காயையே உடைக்கும் ராட்சத நண்டுகள் வாழும் தீவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானியைத் தேடும் முயற்சி
புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.
நாகை: 'ரூ.100 கோடி' போதைப்பொருளை பறிமுதல் செய்தது எப்படி? வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல்
நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எல்நினோ எதிரொலி: இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா?
எல் நினோ தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், 2026–27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை: ஒரு புறம் 19 இரானிய கப்பல்கள், மறுபுறம் அமெரிக்க போர்க்கப்பல் - திரைமறைவில் ராஜதந்திர நகர்வுகள்
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ள சம்பவம், நாட்டின் அரசியல், ராஜதந்திர மற்றும் வணிகத் துறைகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் ஜென் ஸி அணுகுமுறையால் மாறும் சூழல் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுமா?
"இன்று வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பாஜக வாக்காளர்களின் குழந்தைகள். அவர்களின் பெற்றோர் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இந்தப் பிரிவில் பெரும்பான்மையான பெண்களின் வாக்குகளும் அடங்கும். குறிப்பாக, இந்தப் பெண்கள்தான் நரேந்திர மோதியின் ஆதரவுத் தளத்தை உருவாக்கினர்"
தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?
"என்னுடைய சிறு வயதிலேயே என் தாயார் இறந்துவிட்டதால் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். 12ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு தந்தையுடன் தங்கியிருந்த போது அருண்குமாரை சந்தித்தேன். அவருடன் இந்தியாவில் வாழ்வது என முடிவெடுத்தேன்"
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை
இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சம்பவமும் உள்ளது. அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் . தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தானும் பலியானார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































